புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே திருநல்லூரில் (தென்னலூர்) நேற்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆயத்தமானதை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
மார்கழி முதல் நாளான நேற்று திருநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. அப்போது, கோயில் காளைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல், அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏராளமான காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதையறிந்த போலீஸார், அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாதென கூறி தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, காளைகள் அவிழ்த்துவிடப்படாமல் கொண்டு செல்லப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago