அரியலூர்: அரியலூர் அருகேயுள்ள பள்ளகிருஷ்ணாபுரத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியது: அரியலூரிலிருந்து சுண்டக்குடிக்கு காலை 6.50 மற்றும் மாலை 4.40 மணிக்கும், சுண்டக்குடியிலிருந்து அரியலூருக்கு காலை 8.10 மற்றும் மாலை 5.50 மணிக்கும் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவையால், அரியலூர், அம்மாகுளம், ரங்கசமுத்திரம், சுப்புராயபுரம், பள்ளகிருஷ்ணாபுரம், பொய்யூர், இடையாத்தங்குடி, ஏழேரி, பனங்கூர், வாழைக்குழி, ஆலந்துறையார்கட்டளை, சுண்டக்குடி ஆகிய கிராம மக்கள் பயன்பெறுவர் என்றார்.
நிகழ்ச்சிக்கு, அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் ராமநாதன், கிளை மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago