திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூரில் - கூட்டுறவு மருந்தகங்கள் திறப்பு :

By செய்திப்பிரிவு

கூட்டுறவுத் துறை சார்பில் தமிழகத்தின் 36 மாவட்டங்களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, திருச்சி பாலக்கரையில் உள்ள சிந்தாமணி கிட்டங்கியில் புதிய கூட்டுறவு மருந்தகத்தில் முதல் விற்பனையை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தி.ஜெயராமன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சிந்தாமணி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் என்.பத்மகுமார், சரக துணைப் பதிவாளர் க.சாய்நந்தினி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அ.ஹபியுல்லா, பண்டகசாலை பொது மேலாளர் சுகுணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரியலூரில் ரயில் நிலையம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மருந்தகத்தில் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், எம்எல்ஏ கு.சின்னப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, உடையார்பாளையத்தில் உள்ள மருந்தகத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும், பெரம்பலூரில் ஆட்சியர் ப. வெங்கடபிரியாவும் மருந்தகங்களில் முதல் விற்பனையை தொடங்கிவைத்தனர். இந்நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

கரூர் மாநகராட்சியில் வெங்கமேடு, தாந்தோணிமலை மருந்தகங்களில் ஆட்சியர் த.பிரபுசங்கர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்