பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த : மத்திய அரசு நடவடிக்கை: அண்ணாமலை :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்: பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற பாஜக மதுரை பெருங்கோட்ட மண்டல் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியது:

அதிமுகவுடன் பாஜகவின் உறவு நீடிக்கிறது. மத்திய அரசு கோமாரி நோய் தடுப்பூசி வழங்கவில்லை என்பது முற்றிலும் பொய். மத்திய அரசு தடுப்பூசி வழங்கிய விவரத்தை நான் தேதிவாரியாக வெளியிட்டுள்ளேன். இதுதவிர தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக மாநில அரசு வாங்கவும் அதிகாரம் உண்டு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது கம்பெனி, கரப்ஷன், கமிஷன் என தனது கொள்கையை மாற்றிவிட்டது. ஒருகாலத்தில் லாபகரமாக இயங்கிய பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் கடந்த காங்கிரஸ் ஆட்சி தான். இந்த நிறுவனத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்