திருநெல்வேலியில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிவன், முருகன், பெருமாள் கோயில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும் சிறுவர், சிறுமியரின் பஜனைகளும் நடைபெற்றன.
மார்கழி மாதம் நேற்று பிறந்ததையொட்டி, திருவேங்கடநாதபுரம், திம்மராஜபுரம் வெங்கடாஜலபதி கோயில்கள், டவுன் கரியமாணிக்கபெருமாள் கோயில், திருநெல்வேலி சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயில், பாளையங்கோட்டை கோபாலசுவாமி கோயில் உள்ளிட்ட வைணவ கோயில்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், தாயாருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பாளையங்கோட்டை கோபால சுவாமி கோயிலில் அதிகாலையில் கோ பூஜை நடத்தப்பட்டது.
இதுபோல், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், திருநெல்வேலி சந்திப்பு கைலாசநாதர் கோயில், தச்சநல்லூர் நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் அதிகாலை யில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருநெல்வேலி டவுனில் 4 ரதவீதிகளிலும் சிறுவர், சிறுமியரின் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago