வேலூர்: மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற விஐடி மாணவிகளை, வேந்தர் கோ.விசுவநாதன் பாராட்டினார்.
சேலத்தில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டத்தின் சார்பில் விஐடி முதலாம் ஆண்டு மாணவி பூர்ணா 71 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் அடுத்த மாதம் ஒடிஷாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பூர்ணா பங்கேற்க உள்ளார். அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்ற விஐடி மாணவி தேவதர்ஷினி, 48-51 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்துடன் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையும் பெற்றுள்ளார்.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று வேலூர் மாவட்டத்துக்கும் விஐடி பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள மாணவிகள் பூர்ணா மற்றும் தேவதர்ஷினி ஆகியோரை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், துணைவேந்தர் ராம்பாபு கோடாளி, இணை துணை வேந்தர் நாராயணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago