திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் குழந்தையை கடத்த முயற்சி செய்ததாக கூறி மனநலம் பாதித்த இளைஞரை பொது மக்கள் சரமாரியாக தாக்கி காவல் துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் புறநோயாளிகளும், உள் நோயாளிகளாக அனுமதிக் கப்பட்டவர்களை பார்க்க அவர் களது உறவினர்கள் ஆயிரக் கணக்கானோர் தினசரி வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக குழந்தைகள் நலப்பிரிவில் மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த நபரிடம் விசாரணை செய்ததில் நோயாளி களுக்கு உதவி செய்ய வந்துள் ளேன் எனக்கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று காலையும் அந்த நபர் குழந்தைகள் நலப்பிரிவில் இங்கும், அங்குமாய் சுற்றி வந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாகத் தாக்கி குழந்தை கடத்த வந்ததாக கூறி மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் திருப்பத்தூர் நகர காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சக்தி வேல்(36) என்பதும், இவர் சற்று மனநிலை பாதிக்கப் பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த நபரை எச்சரித்த காவல் துறையினர் அவரை மனநலம் காப்பகத்தில் ஒப்படைக்க அழைத்துச்சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago