கோவை: மாநில நெடுஞ்சாலைத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கோவை- பாலக்காடு சாலையில், ஆத்துபாலம் முதல் மதுக்கரை வரையிலான மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் நடைபாதை, சாலை ஓர கடைகள், பெயர் பலகைகள், விளம்பர பதாகைகள், நிழற்கூரைகள் ஆகியவை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இவை போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிக்கின்றன. எனவே, ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து 7 நாட்களுக்குள் (டிச.22 வரை) அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் அவை நெடுஞ்சாலைத்துறை மூலம் அகற்றப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago