‘கடந்த 10 நாட்களில் மக்கும் குப்பை சேகரிப்பு இரண்டு மடங்காக அதிகரிப்பு’ :

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களில் மக்கும் குப்பை சேகரிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாநகரில் வீடுகள்தோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பையை நாள்தோறும் சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு 90 மெட்ரிக் டன்னாக இருந்த மக்கும் குப்பையின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது நாள்தோறும் சுமார் 175 மெட்ரிக் டன் மக்கும் குப்பை தனியாக பெறப்பட்டு, வெள்ளலூர் குப்பை கிடங்கில் உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வாங்கும்போது, எளிதாக கொண்டு சென்று செயலாக்கம் செய்ய சிரமம் இல்லாமல் இருக்கும். மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து ஓட்டல் மற்றும் வணிக நிறுவனங்களிலும் கருப்பு கலர் பாலித்தீன் கவர்களை உபயோகிக்காமல், மக்கும், மக்காத குப்பையை தனித்தனியாக பெட்டிகளில் சேகரித்து மாநகராட்சி வண்டிகளில் ஒப்படைக்க வேண்டும். குப்பைக் கழிவுகளை பொதுவெளியில் கொட்டுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE