நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் : வரும் 22,29-ம் தேதிகளில் ‘லோக் அதாலத்’ :

By செய்திப்பிரிவு

கோவை: நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, காணொலி வாயிலாக, ‘லோக்அதாலத்’ விசாரணை நடத்த சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நேற்று ‘லோக் அதாலத்’ விசாரணை நடைபெற்றது. இதில், மொத்தம் 12 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 2 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக மொத்தம் ரூ.1.23 லட்சம் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக, நுகர்வோர் குறைதீர் ஆணைய அதிகாரிகள் கூறும்போது, “உரிய காலத்தில் இழப்பீடு கிடைக்காமல் நுகர்வோர் அவதிக்குள்ளாவதை தவிர்க்க வரும் 22, 29-ம் தேதிகளில் மீண்டும் காணொலி வாயிலாக ‘லோக் அதாலத்’ விசாரணை நடத்தப்பட உள்ளது. எனவே, நீண்ட காலம் நிலுவையிலுள்ள வழக்கில் தீர்வு காண விரும்பும் புகார்தாரர்கள், எதிர் மனுதாரர்கள் மற்றும் இருதரப்பு வழக்கறிஞர்கள், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். லோக் அதாலத்தில் தீர்வு காணும் வழக்குகளில் மேல்முறையீடு செய்ய இயலாது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்