சேலத்தில் ரயில்வே ஓய்வூதியர் குறைதீர் முகாம் : 129 பேருக்கு ரூ.1.05 கோடி பணப்பயன் வழங்கல் :

சேலம்: சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் ரயில்வே ஓய்வூதியர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில், 129 பேருக்கு ரூ.1 கோடியே 5 லட்சத்து 47 ஆயிரத்து 993 பணப்பயன் வழங்கப்பட்டன.

சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் ஓய்வுபெற்ற ரயில்வே பணியாளர்களுக்கான, ஓய்வூதியம் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார். கோட்ட முதுநிலை பணியாளர் அலுவலர் சவுந்தர பாண்டியன், கோட்ட முதுநிலை நிதி அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வூதியர் குறைதீர்க்கும் முகாமில், ஓய்வூதியர்கள் 145 பேர் பங்கேற்று, ஓய்வூதியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்தனர். அவர்களில் 129 ஓய்வூதியர்களின் குறைகள் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 47 ஆயிரத்து 993 பணப்பயன் வழங்கப்பட்டன. மற்ற 16 ஓய்வூதியர்கள் குறை தொடர்பான மனுக்கள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், கோரிக்கை மனுக்களை பெற்ற அலுவலர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்