நாமக்கல்லில் வணிகர்கள் பங்கேற்ற திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆலோசனை :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பாக வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையர் கி.மு.அமுதா தலைமை வகித்து பேசியதாவது:

நாமக்கல் நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் தினசரி உருவாகும் திடக்கழிவுகள், திடக்கழிவு மேலாண்மை விதிக்கு உட்பட்டு சேகரம் செய்யப்படும். மேலும், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் இரண்டு தவணை காரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியமாகும். தடுப்பூசி செலுத்தாத மக்களை வணிக நிறுவனங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. அரசால் தடைவிதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வணிக நிறுவனங்களில் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகராட்சி துப்புரவு அலுவலர் சுகவனம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நகராட்சி ஆணையர் கி.மு.சுதா பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்