சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் 266 அரசுப் பணியாளர்களுக்கு 37 நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு தொடங்கியது.
புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள், பதவி உயர்வு பெறும் பணியாளர்கல் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பு அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக பணிக்கு சேருபவர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களிலேயே ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்றுநர்களாக நியமித்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் 266 பேருக்கு மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 37 நாள் பயிற்சி வகுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பயிற்சியை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இணை ஆணையர் (ஓய்வு) பழனி தொடங்கி வைத்தார்.
இதில், சேலம் அரசு அலுவலர் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் குணசேகர், பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி மையத்தின் முதல்வர் சாதனைக்குறள், கணக்கு அலுவலர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago