சேலத்தில் நாளை புத்தகக் கண்காட்சி தொடக்கம் நூல்களுக்கு சிறப்பு தள்ளுபடி :

சேலம்: சேலம் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான புத்தகக் கண்காட்சி நாளை (17-ம் தேதி) தொடங்கி வரும் 26-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கவுள்ளது.

புத்தகக் கண்காட்சியில் கலை, இலக்கியம், வரலாறு, நாவல், பொது அறிவு, அரசியல், சமையல் கலை, மருத்துவம், கவிதை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஏராளமான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் வெளியீடுகளும் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றுள்ள இப்புத்தகக் கண்காட்சியானது, வார நாட்களில் தினமும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறுகிறது.

கண்காட்சியில் உள்ள நூல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். ஏற்பாடுகளை தெய்வீகம் திருமண மண்டப உரிமையாளர் டாக்டர் கந்தசாமி செய்து வருகிறார்.சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் நாளை புத்தகக் கண்காட்சி தொடங்கவுள்ளது. இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

படம்: எஸ்.குரு பிரசாத்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE