ஈரோடு: மத்திய அரசின் பிரதமர் நிதி திட்டத்தின்கீழ், வங்கிகளில் மூலம் கால்நடை பராமரிப்புக்காக கிசான் கிரெடிட் கார்டு வழங்கி, கடன் உதவி செய்யப்பட்டு வருகிறது. இந்த கார்டு மூலம் விவசாயிகள் எவ்வித பிணையம் இல்லாமல் வங்கியில் இருந்து ரூ.1.40 லட்சம் வரை கடன் பெறலாம்.
கிசான் கிரெடிட் கார்டு பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை (17-ம் தேதி) புன்செய்புளியம்பட்டி, சிவகிரியிலும், 20-ம் தேதி சத்தியமங்கலம், நசியனூரிலும், 22-ம் தேதி தாளவாடி, காஞ்சிகோயில், 24-ம் தேதி அந்தியூர், அவல்பூந்துறை, 27-ம் தேதி கெட்டிசேவியூர், அம்மாபேட்டை, 29-ம் தேதி சிறுவலூர், ஆப்பக்கூடல், 31-ம் தேதி சென்னிமலை கள்ளிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது.
இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தங்களது ஆதார்அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக முன்பக்க நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என ஈரோடு ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago