எச்ஐவி, கரோனா, ரத்ததானம் பற்றி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வரும் 22-ம் தேதி ஆன்லைனில் வினாடி - வினா போட்டி நடக்கிறது.
இதுதொடர்பாக புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கதிட்ட இயக்குநர் சித்ராதேவிவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு, மாநில அளவிலான வினாடி - வினா போட்டி, வரும் 22-ம் தேதி ஆன்லைன் மூலம் நடக்கிறது.போட்டியில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், முதல் 15 மாணவர்களுக்கு ரூ.4 ஆயிரம் ரொக் கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
அடுத்த 15 மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம், சான்றிதழ் வழங் கப்படும்.
முதல் இரு மாணவர்கள், 8 மாநிலங்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்பர்.
மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பர்.
போட்டியில் எச்ஐவி, காசநோய், கரோனா மற்றும் தன்னார்வ ரத்ததானம் குறித்த கேள்விகள் கேட்கப்படும். மேலும் விவரங்களுக்கு 93454 58145 - 90950 99166 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago