பள்ளி மாணவர்கள் படியில்தொங்கிக்கொண்டு பேருந்துகளில் பயணம் செய்வதை முற்றிலுமாக தடுக்க விழிப்புணர்வு மேற்கொள்வது குறித்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் பி.என்.தர் தெரிவித்தது:
தேவைப்படும் வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேருந்து ஓட்டுநர்மற்றும் நடத்துநர், காவல்துறையினர் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கு வேண்டும். மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் ஒரு குழுஅமைத்து பள்ளி செல்லா குழந்தைகளை ஒரு வாரத்திற்குள்ளாக பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நரிகுறவர் இன இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களையும் பள்ளியில் சேர்ப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் சிவராமன், கார்த்திகா,சுப்ரமணியன், தமிழ்நாடு அரசு போக்குவரத் துக்கழக துணை மேலாளர் துரைசாமி, உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தூர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேவைப்படும் வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கிட வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago