அஞ்சல் அட்டையில் பிரதமருக்கு யோசனை : 4 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் பங்கேற்கலாம்

By செய்திப்பிரிவு

புதுவை அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப் பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அஞ்சல் அட்டை பிரச்சாரத்தை மத்திய அரசின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையுடன் இணைந்து இந்திய அஞ்சல்துறை ஏற்பாடு செய்துள்ளது. பிரச்சாரத்தின் முதல்கட்டம் வரும் 20-ம் தேதி நடக்கிறது. இதில் 4 முதல்12ம் வகுப்பு வரை மாணவர்கள் பங்கேற்கலாம். `சுதந்திர போராட்டத்தின் போற்றப்படாத நாயகர்கள்’ அல்லது `2047-ல் இந்தியாவுக்கான எனதுபார்வை’ என்ற இரு தலைப்புகளில் ஒன்றில் மாணவர்கள் பிரதமருக்கு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பவேண்டும்.

பள்ளி நிர்வாகங்கள் அஞ்சல்அட்டை எழுதும் பிரச்சாரத்தை பள்ளிகளில் நடத்துவர். சிறந்த யோசனைகளுடன் கூடிய 10 அஞ்சல் அட்டைகளை பள்ளி நிர்வாகம் தேர்வு செய்து இந்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சிறந்த யோசனைகளை கொண்ட 500 முதல் ஆயிரம் அஞ்சல் அட்டைகள் டெல்லி விஞ்ஞான் பவனில் காட்சிப்படுத்தப்படும். சிறந்த யோசனைகள் வழங்கிய75 மாணவர்கள் அழைக்கப்பட்டு பிரதமருடன் உரையாடுவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்