நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக - நெல்லிக்குப்பம், பண்ருட்டியில் வாக்கு எண்ணும் மையங்கள் தேர்வு :

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், நெல்லிக்குப்பம், பண்ருட்டியில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு இடம் தேர்வு செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லிக்குப்பம் நகராட்சிக் குட்பட்ட டேனிஷ்மிஷன் உயர்நிலை பள்ளியிலும், பண்ருட்டி நகராட்சிக்குட்பட்ட  சுப்புராயலு செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவு முடிந்த பின், இங்கு வாக்குப்பெட்டிகள் பாதுகாத்து வைக்கப்படவுள்ள வைப்பு அறையின் உறுதித்தன்மையை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு கேமரா பொருத்தம்

வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான இடவசதிகள் குறித்தும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் மையம் மற்றும் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு அறையை கண்காணிப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மல்லிகா, வருவாய் வட்டாட்சியர் பிரகாஷ், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, பண்ருட்டி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்