மீனாட்சி கோயில் சொத்துகளை தவறாக பதிவு செய்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை : அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துகள் தவறாக பத்திரப் பதிவு செய்திருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடக்கும் சோதனையில் திமுக அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த வாரம் பத்திரப்பதிவுத் துறையில் கூட சோதனை நடத்தினர். எனவே, முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடக்கும் சோதனையில் எந்த உள் நோக்கமும் கிடையாது. இதை அரசி யலாக்க வேண்டாம்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் வசம் காவல்துறை உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண் ணாமலை சொல்வது தவறு. யார் தவறு செய்தாலும் காவல் துறை நடவடிக்கை எடுக்கும். திமுகவினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சுதந்திரமாகச் செயல்படுகிறது.

மத்திய அரசிடம் தமிழகத்துக்குத் தேவையானதை முதல்வர் கேட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துகள் தவறாக பத்திரப் பதிவு செய்திருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறாகப் பதிவுசெய்யும் சொத்துகளை ரத்து செய்யும் சட்ட முன்வடிவு அமலுக்கு வந்தால் இதுபோன்ற முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE