மதுரையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2012, 2013, 2015, 2017-ம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் உயிரிழந்தனர். ‘கரோனா’ தொற்று பரவலுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் டெங்கு பரவலும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. அதன்பிறகு, சுகா தாரத்துறையினரின் தீவிர நட வடிக்கையால் டெங்கு பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
தற்போது கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த உருமாற்றமான ஒமைக்ரான் தொற்று பரவி விடாமல் தடுக்க, மாநிலம் முழுவதும் விமான நிலையம் முதல் குக்கிராமங்கள் வரை சுகாதாரத்துறை தீவிரமாகக் கண் காணித்து வருகிறது.
மேலும் வடகிழக்குப் பருவ மழையால் மழைநீர் வடிய ஆங் காங்கே முறையான கால்வாய் வசதியின்றி பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மக்களும் வீடுகளில் பாத்திரங்களில் தண்ணீரை மூடாமல் பிடித்து வைக்கின்றனர். முன்பு போல் டயர், தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அகற்றாமல் போட்டுள்ளனர். அதனால், நடப்பாண்டு மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வீரியம் எடுக்கத் தொடங்கி உள்ளது. கடந்த 15 நாட்களில் 25 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு மரணமும் வேகமாக நிகழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபரில் 18 பேர், நவம்பரில் 37 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளும் மழைநீர் தேங்கு வதை தடுப்பதை விட, தற்போது கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவாமல் தடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதனால் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தவறி விட்டனரா என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘டெங்கு கட்டுக்குள்தான் இருக்கிறது. இதுவரை யாரும் டெங்குவால் இறக்கவில்லை’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago