டிஜிபியை சந்திக்க அனுமதி கோரிய 50 பேரின் மனு நிராகரிப்பு : சிவகங்கை மாவட்ட போலீஸார் குமுறல்

By செய்திப்பிரிவு

மதுரையில் இன்று நடக்கும் குறைதீர் கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபுவை சந்திக்க 50-க்கும் மேற்பட்ட போலீஸார் கொடுத்த மனுக்கள் நிராகரிக் கப்பட்டதால் அவர்கள் புலம்பு கின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வித்தபடி ‘உங்கள் துறையில் முதல்வர்’ என்ற திட்டத்தில் போலீ ஸாரின் குறைகளைத் தீர்க்க மாவட்ட, மண்டல அளவில் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மாவட்ட அளவில் எஸ்பிக்கள் தலைமையில் நடந்த கூட்டங்களில் தீர்க்க முடியாத மனுக்களைத் தீர்க்க தற்போது மண்டல அளவில் கூட்டங்கள் நடக்கின்றன.

அதன்படி தென் மண்டல அளவில் குறைதீர்க்கும் கூட்டம் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

இதில் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்கிறார். இதற்காக சிவ கங்கை மாவட்டத்தில் குறை தீர்க் கூட்டத்தில் பங்கேற்கும் போலீஸாரிடம் இருந்து முன் கூட்டியே மனுக்கள் பெறப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்டோரது மனுக்களை நிராகரித்து விட்டதாக போலீஸார் புலம்புகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ‘போலீஸார் மண் டலம் விட்டு மண்டலத்துக்கு இட மாறுதலில் செல்ல டிஜிபிதான் அனுமதி தர வேண்டும். அதே போல் பதவி உயர்வு, ஊதிய முரண்பாடு பிரச்சினையும் உள் ளது. இதுபோன்ற புகார்களை ஏற்கெனவே எஸ்பியிடம் கொடுத் தோம்.

நடவடிக்கை இல்லாததால் டிஜிபியை சந்திக்க மனு கொடுத்தோம். ஆனால் எங்களது மனுக் களை நிராகரித்துவிட்டனர்.

இதனால் குறைதீர்க் கூட்டம் நடத்தும் நோக்கமே நிறைவேறாமல் போகிறது, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்