அதேநேரம், மேலூர் சாலையில் சாலையோர காய்கறி கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு செல்லாமல் சாலையோரக் கடைகளில் காய்கறி வாங்குகின்றனர். இதையடுத்து உழவர் சந்தையில் கடை நடத்த அனுமதி பெற்ற விவசாயிகளும் சாலையோரத்திலேயே கடைகளை அமைத்து விற்பனை செய்கின்றனர். சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்துமாறு வேளாண் வணிகத் துறை அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகளை வலியுறுத்தினர். ஆனால் குத்தகைதாரருக்கு கட்டண வசூல் பாதிக்கும் என்பதால், சாலையோர கடைகளை அகற்ற பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உழவர்சந்தை திறந்த சில வாரங்களிலேயே மூடப்பட்டுள்ளது. பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாததால்தான் உழவர் சந்தை செயல்படவில்லை என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago