ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி கிறிஸ்டியன் பெர்னாண்டோ மனைவி பிலோமினாம்மாள்(75). கணவனை இழந்த இவருக்கு 4 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.
கூரை வீட்டில் தனியாக வசித்த இவர் நேற்று முன்தினம் இரவு மின்வெட்டு காரணமாக மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு தூங்கினார்.
தூக்கத்தில் விளக்கை தட்டிவிட்டதால் குடிசையில் தீப்பொறி பட்டு, மூதாட்டி மீதும் தீப் பற்றியது. அருகில் வசிப்பவர்கள் அவரை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாம்பன் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago