கோயில் தணிக்கை பணிகள் விரைவில் முடிவடையும் : உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

By செய்திப்பிரிவு

கோயில்களில் தணிக்கை பணிகள் விரைவில் முடிவடையும் என உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

கோவை ஈஷா யோகா மையம் சார்பில் ஜெகதீஸ் வாசுதேவ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக் கல் செய்த மனு:

தமிழகத்தில் இந்து அறநி லையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கட்டிட அமைப்பு, நிலங்கள், கோயில் களின் அசையும், அசையா சொத்துகள் விவரம், பக்தர்கள் காணிக்கை தொகையின் நிலவரம் குறித்து வல்லுநர் குழு அமைத்து தணிக்கைக்கு உட்படுத்த உத்த ரவிட வேண்டும். இவ்வாறு மனு வில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்த மனுவில், கோயில்களில் தணிக்கை செய்வதற்காக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கோயில்களில் தணிக்கை பணி விரைவில் முடிவடையும் எனக் கூறப்பட்டிருந்தது. பின்னர் விசாரணையை ஜன. 12-க்கு நீதி பதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்