குமாரபாளையத்தில் - சேதமான சாலையை சீரமைக்க கோரிக்கை :

குமாரபாளையத்தில் உள்ள சேலம்-கோவை புறவழிச்சாலையின் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் வழியாக சேலம் - கோவை புறவழிச்சாலை செல்கிறது. இதன் இணைப்புச் சாலை மண் சாலையாக உள்ளது. இதனால், அண்மையில் பெய்த தொடர் மழையின்போது, மண் அரிப்பு ஏற்பட்டு சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், இணைப்புச் சாலை வழியாக புறவழிச்சாலைக்கு திரும்பும் அனைத்து வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தவிர, விபத்து அபாயமும் நிலவி வருகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இச்சாலை வழியாக சென்ற டேங்கர் லாரி கேரள மாநிலத்துக்கு சென்ற சொகுசுப் பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது. பழுதான இச்சாலையில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நேரிடுவதை தவிர்க்க இயலவில்லை.

எனவே குண்டும், குழியுமாக உள்ள சாலையை நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து சீரமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE