மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டியில் ஈரோடு அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி :

By செய்திப்பிரிவு

மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டியில், ஈரோடு அரசுப் பள்ளி மாணவர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு பாட்மிண்டன்(பூப்பந்து) கழகத்தின் சார்பாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மாநில அளவிலான, ஜூனியர் பாட்மிண்டன் போட்டி நடந்தது. கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடந்த இப்போட்டியில், ஈரோடு அரசு பள்ளி மாணவர் அணி பங்கேற்றது.

இதில், காலிறுதி போட்டியில் கடலூர் மாவட்ட அணியை 35-19, 35-14 என்ற புள்ளியிலும், அரையிறுதியில் திண்டுக்கல் அணியை 35-33, 35-32 என்ற புள்ளியிலும் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதிப்போட்டியில், ஈரோடு - மயிலாடுதுறை அணியினர் மோதினர். இதில், 36-34, 35-33 என்ற புள்ளி கணக்கில் ஈரோடு அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சாவாக்காட்டுப் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களான சிவசுதர்சன், சுரேஷ்குமார் ஆகியோர், தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில அணிக்கு தேர்வான மாணவர்கள் மற்றும் ஈரோடு அணி மாணவர்களுக்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பாராட்டுத் தெரிவித்தார். இந்நிகழ்வில், ஈரோடு மாவட்ட பாட்மிண்டன் கழக புரவலர் ரவிந்திரநாத், செயலாளர் சுல்தான் சையது, தலைவர் பிரகாஷ், இணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு அரசுப் பள்ளி மாணவர் அணிக்கு, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பாராட்டுத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்