கஞ்சா விற்பனை செய்ததாக நிகழாண்டில் - திருச்சியில் 260 பேர் கைது :

By செய்திப்பிரிவு

கஞ்சா விற்பனை செய்ததாக திருச்சியில் நிகழாண்டில் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் க.கார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது, குறிப்பாக பள்ளிகள், கல்லூரி களுக்கு அருகில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் போலீஸாருக்கு மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து மாநகரிலுள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அந்தந்த பகுதியிலுள்ள காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் ஆசிரியர்கள், மாணவர்கள், போலீஸார் உள்ளிட் டோரைக் கொண்ட வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்த குழுக்களில் வரக்கூடிய தகவல் களின்பேரில், அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன்படி, திருச்சி மாநகரில் நிகழாண்டில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக இதுவரை 186 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, 260 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இனிவரும் நாட்களிலும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் க.கார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்