அரியலூர் மாவட்டத்தில் - ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்குவதை கைவிட ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை :

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட 8-வது மாநாடு மற்றும் பொதுக் கூட்டம் நேற்று தொடங்கியது.

2 நாள் நடைபெறும் இம்மாநாட் டுக்கு, மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, மாவட்டச் செயலாளர் மணிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். அக்கட்சியின் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் பேசினார். செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, மகாராஜன், இளங்கோவன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டி பாசன வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். திருமானூர் பகுதி யில் கல்லூரி, நவீன அரிசி ஆலை, தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன.

பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியது:

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மழை, வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மாநில அரசு ஹெக்டேருக்கு அறிவித்துள்ள ரூ.20,000 நிவாரணத்தை ஏக்க ருக்கு ரூ.30,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்