நவகைலாய கோயில்களுக்கு நெல்லையில் சிறப்பு பேருந்து :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி அரசு போக்கு வரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இவ்வாண்டு மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமை தினங்களான 19.12.2021, 26.12.2021, 2.1.2022 மற்றும் 9.1.2022 ஆகிய நாட்களில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவகைலாய திருக் கோயில்களுக்கு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு சேவை பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி மண்டலம் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு சேவை பேருந்துகள் 4 நாட்களிலும், காலை 7 மணிக்கு திருநெல் வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூமங்கலம் (புன்னக்காயல்)ஆகிய நவகைலாய திருக்கோயில் களுக்கு சென்று, இரவுக்குள் திருநெல்வேலி வந்து சேரும்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இந்த சிறப்பு சேவை பேருந்துகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (தொடர்புக்கு எண். 94875 99456). இதற்கான பயண கட்டண தொகை நபர் ஒன்றுக்கு ரூ.500 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்