சமூக நலம்-மகளிர் உரிமைத்துறை சார்பில் பணியிடங்களில் பெண் களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் தடை மற்றும் தீர்வுசட்டம் குறித்த விழிப் புணர்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், ஆட்சியர் குஷ்வாஹா பேசும்போது, ‘‘அனைத்து அரசு துறை அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் தடை மற்றும் தீர்வு குறித்த சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஒரு பணித்தளத்தின் வேலையளிப்போர் ஒவ்வொருவரும் எழுத்துப்பூர்வ மாக ஒரு ஆணையின் மூலம் உள்ளக புகார் குழு (Internal Complaints Committee) என்ற தனி குழுவை அமைக்க வேண் டும். இந்த குழுவில் பணி தளத்தின் தலைமை ஊழியர், மூத்த நிலையான ஒரு பெண் ஊழியர், 2 ஊழியர்கள், அரசு சாரா அமைப்பு அல்லது சங்கங்களில் இருந்து ஒரு உறுப்பினர் ஆகியோரை குழு உறுப்பினர்களாக இணைக்க வேண்டும்.
10 தொழிலாளிகளுக்கு குறைவாக உள்ள அலுவலகங் களில் உள்ளக புகார் குழு அமைக்க முடியாத பட்சத்தில் நிறுவனங்களிடம் இருந்து பாலியல்துன்புறுத்தல் புகார்களை பெற உள்ளூர் புகார் குழு (Local Complaints Committee) அமைக்க வேண்டும். பணியிடங்களில் பெண் துன்புறுத்தலை தடுக்க வழிமுறை களை பின்பற்றி கையாள வேண்டும்.
பணியிடங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டால் 3 மாதங் களுக்குள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விசாரணை அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.
புகார் பெறப்பட்ட 90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். பணியிடங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டால் பாலியல் தொடர்பான புகார்களை SHE BOX www.shebox.nic.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
அதேபோல, பணியிடங்களில் தன்னுடன் பணியாற்றும் பெண் ஊழியர்களை கண்ணியத்துடன், சமமாக நடத்துவேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் பெண்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பாலியல் துன்புறுத்தல் சார்ந்த நடவடிக்கைகளை மேற் கொள்ளமாட்டோம் என ஒவ்வொரு ஊழியரும் உறுதிமொழியை எடுக்க வேண்டும்’’என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி, திருப்பத்தூர் சார் ஆட்சியர் (பொறுப்பு) பானு, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஹரிஹரன், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் பூங்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago