ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கான ஆன்லைன் பதிவு கடந்த 14-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
எனவே, தி.மலை மாவட்டத் தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள அனைத்து ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதி திராவிடர் இன மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் நடப்புகல்வியாண்டுக்கான கல்வி உதவித் தொகை விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்துகொள்ள வேண்டும். கல்வி நிறுவனங் களும் தங்களிடம் படிக்கும் மாணவர்களின் விவரங்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்’’ என தி.மலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள் ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago