ஆம்பூரில் சாலைகளை சீரமைக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

ஆம்பூர்: ஆம்பூர் நகரில் மழையால் குண்டும் குழியுமாக மாறிய முக்கிய சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும் என வணிகர்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி ஆணையாளரிடம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் மண்டலத் தலைவர் ஆம்பூர் சி.கிருஷ்ணன் அளித்துள்ள மனுவில், ‘‘ஆம்பூர் நகரின் முக்கிய சாலையான பைபாஸ் சாலையில் இருந்து பெருமாள் கோயில் பின்புறம் வழியாக ஓ.வி.ரோட்டை அடையும் சாலையும், கிருஷ்ணா திரையரங்கத்தில் இருந்து தரைப்பாலம் வழியாக ஆம்பூர் நகருக்கு வரும் சாலையும் மக்களின் பிரதான சாலையாக உள்ளது. தற்போது, பெய்த மழையால் இந்த இரண்டு சாலைகள் மட்டுமில்லாமல் பெரும்பாலான முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. நாயக்கநேரி, பெத்லேகம் மற்றும் ரெட்டித்தோப்பு பகுதி மக்கள் வந்து செல்லும் ரெட்டித்தோப்பு சாலை மோசமாக இருப்பதுடன் தினசரி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்