ஏலகிரி மலையில் குப்பை இல்லாமல் பராமரியுங்கள் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவு

ஏலகிரி மலை சுற்றுலாத்தலம் என்பதால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சாலைகளில் குப்பை இல்லாமல் தூய்மையாக பரா மரிக்க வேண்டும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு தொடர்பாக ஆட்சியர் கூறும்போது, ‘‘ஏலகிரி மலை சுற்றுலாத்தலமாக இருப்பதால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சாலையோரங்களில் குப்பை இல்லாதவாறு தூய்மையாக பராமரிக்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் எந்த வீட்டுக்கு குடிநீர் தேவைப்படுகிறது என்பதை கண்டறிந்து அதற்கான அறிக்கையை அளிக்க உத்தர விடப்பட்டுள்ளது. ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட 14 குக்கிராமங்களில் சாலை வசதி களை மேம்படுத்துவதுடன், பழு தடைந்த குடிநீர் தொட்டிகளை சரி செய்ய வேண்டும் என்றும் ஊராட்சியில் உள்ள 3 ஏரிகளையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏலகிரி மலையில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், கடைகள், சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதை, ஊராட்சி அளவில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வீடுகளில் இருந்தும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும்.

ஒரு ஆண்டுக்குள் குறைந்த பட்சம் 10 வீடுகளிலாவது மண்புழு உரம் தயாரிப்பில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்