ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2015-ம் ஆண்டில் இளைஞர் நீதி சட்டத்தின் விதிமுறைகள் படி அமைக்கப்பட்ட இளைஞர் நீதிக்குழுமத்துக்கு சமூக நல உறுப்பினர்களை நியமிக்க தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. ஒரு பெண் உட்பட 2 சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நிய மிக்கப்பட உள்ளனர்.
குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணி களில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர்கள் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்று தொழில் புரிப வராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயது பூர்த்தி செய்யாதவராக இருக்க வேண்டும்.
ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டும் பதவி வகிக்க தகுதியுள்ளவர் ஆவர். இதற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்தும், மாவட்ட இணையதளத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் உரிய படிவத்தில் 15 நாட்களுக்குள் ‘மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, வேலூர் 632-001’ என்ற முகவரியில் விண்ணப் பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் குறிப்பிட்டுள்ள அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும்’’ என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago