வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பூமி பூஜை :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: தி.மலையில் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு முதற் கட்டமாக ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

தி.மலை வானகார தெருவில் வாடகை கட்டிடத்தில் வருமான வரித்துறை அலுவலகம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதனால், வருமான வரித்துறைக்கு சொந்தமாக கட்டிடம் கட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் 50 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இதில், முதற் கட்டமாக ரூ.1 கோடி மதிப்பிலான கட்டப்பட உள்ள புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில், வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் கீதா ரவிச்சந்திரன், புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருவண்ணாமலையில் வரி செலுத்துவோருக்கு ஏதுவாக புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. மாவட்டத்தில் இருந்து ரூ.50 கோடி அளவுக்கு வருமான வரி கிடைக்கிறது. இதனால், வருமான வரித்துறைக்கு சொந்த கட்டிடம் இருந்தால் வரி செலுத்துவதற்கு தேவையான சேவையை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்த முடியும். அதேபோல், வரி செலுத்துவோருக்கு பல்வேறு குறைகளையும் தீர்க்க முடியும். இந்த அலுவலகம் வேலூர் வருமான வரித்துறை கோட்டத்துக்குள் இயங்கும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்