கோவை கிராஸ்கட் சாலையில் ஜோயாலுக்காஸ் கிளை 18-ம் தேதி திறப்பு :

By செய்திப்பிரிவு

கோவை: ஜோயாலுக்காஸ் நகைக்கடையின் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம்கள் கோவை, மதுரை, சேலத்தில் திறக்கப்படுகின்றன.

இதுகுறித்து, ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோயாலுக்காஸ் கூறியதாவது: கோவை கிராஸ்கட் சாலையில், ஜோயாலுக்காஸ் நகைக்கடை ஷோரூம் புதுப்பிக்கப்பட்டது. இந்த புதுப்பிக்கப்பட்ட நகைக்கடை ஷோரூம் வரும் 18-ம் தேதி காலை 11.30 மணிக்கு திறக்கப்படுகிறது. இங்கு உலகத் தரம் மிக்க ஷாப்பிங் அனுபவம் பொதுமக்களுக்கு கிடைக்கும். இங்கு பொதுமக்களின் இலக்குகளை நிறைவேற்றும் வகையில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோவையைப் போல, மதுரை நேதாஜி சாலையில் புதுப்பிக்கப்பட்ட ஜோயாலுக்காஸ் நகைக்கடை ஷோரூம் வரும் 17-ம் தேதி காலை 11.30 மணிக்கு திறக்கப்படுகிறது. சேலத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜோயாலுக்காஸ் நகைக்கடை ஷோரூம் நாளை(16-ம் தேதி) காலை 11.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்