பல்லடம் வட்டம் சித்தம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தலைமை வகித்தார்.
தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேற்று வழங்கினர்.
இந்நிகழ்வில், 5 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுடன், காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
திருப்பூர் மாவட்டத்தில் 433 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 5,094 உறுப்பினர்களுக்கு ரூ.13.69 கோடி மதிப்பில் கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லட்சுமணன், மகளிர் திட்ட இயக்குநர் மதுமிதா, பல்லடம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேன்மொழி உட்பட பலர் பங்கேற்றனர். பல்லடம் அருகே சித்தம்பலத்தில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள், வங்கிக்கடனை வழங்கிய தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago