ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரதாப், கோவை காந்திபுரம் 8-வது வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை, பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு பிரதாப் கடையை பூட்டிச் சென்றார். நேற்று காலை கடைக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே கேஷியர் மேஜையில் இருந்த ரூ.20 லட்சம் தொகை மற்றும் லேப்டாப், செல்போனை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில், காட்டூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இவரது கடைக்கு அருகேயுள்ள ராஜூ என்பவருக்கு சொந்தமான செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இரு கடைகளிலும் வைக்கப் பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago