விவசாயிகளின் கவனத்துக்கு... :

By செய்திப்பிரிவு

உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் எம்.ராஜாத்திவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,‘உடுமலை மின்வாரியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துநிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்களும், புதிதாக விவசாயமின் இணைப்பு பெற விரும்பு வோரும் விரைந்து விவசாய மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தட்கல் திட்டத்தின் மூலம் உரிய கட்டணம் செலுத்தி விரைவாக மின் இணைப்பு பெறலாம். 5 குதிரைத் திறனுக்கு ரூ.2.5 லட்சமும், 7.5 குதிரைத் திறனுக்கு ரூ.2.75 லட்சமும், 10 குதிரைத் திறனுக்கு ரூ.3 லட்சமும், 15 குதிரைத் திறனுக்கு ரூ.4 லட்சமும் செலுத்த வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்