ஓசூர்: ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் உள்ள ஆர்.வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
ஆர்.வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1417 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 62 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இப்பள்ளியில் பள்ளி வளர்ச்சிக்குழு அமைக்கப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் கண்காணிக்கும் வகையில் 12 சிசிடிவி கேமராக்கள் அமைத்தல், பள்ளிக்கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் முழுவதும் வண்ணமடித்தல், புதிய அரங்கம் அமைத்தல், கான்கிரீட் தரைத்தளம் அமைத்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. சீரமைப்பு பணிகளுக்காக மொத்தம் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய பள்ளியின் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் பங்கேற்று, சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். பள்ளி வளர்ச்சிப்பணிக்கு நிதியுதவி வழங்கிய நன்கொடையாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் திருமுருகன், தலைமையாசிரியர் முனிராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு தலைவர் துரை, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago