ஓசூர் பேருந்து நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை கோணிப்பையில் மறைத்து கடத்தி வந்த இருவரை ஓசூர் நகர போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் நகர போலீஸார், ஓசூர் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியான நபர்களை விசாரணை மேற்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பேர் கோணிப்பையை வைத்துக் கொண்டு நின்றிருந்தனர். சந்தேகமடைந்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்களின் பெயர் சாமுல் நாயக் (33), சன்சித் சின்சான்(33) என்பதும், இருவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்த கோணிப்பையை சோதனை மேற் கொண்டதில் அதில் சிறிய அளவுள்ள 9 பண்டல்களில் கஞ்சா இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து அந்த இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 28 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் என போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக பிடிபட்ட இரண்டு நபர்களிடமிருந்து கஞ்சாவை வாங்கி விற்பனையில் ஈடுபடும் முக்கிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago