3 ஆண்டுகளில் 24 ரவுடிகள் கொலை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாநகர காவல் ஆணையர் உத்தரவு :

By செய்திப்பிரிவு

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை ரவுடிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை சேகரிக்க, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூர், அண்ணாநகர், புளியந்தோப்பு, அடையாறு, தி.நகர், பரங்கிமலை, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர் துணை ஆணையர்களுக்கு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

இதையடுத்து, துணை ஆணையர்கள் விவரங்களை சேகரித்தனர். அதன்படி, சென்னையில் கடந்த 2019-ல் 7 ரவுடிகள், 2020-ல் 7 ரவுடிகள், இந்த ஆண்டு 10 ரவுடிகள் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

அதிகபட்சமாக புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 9 ரவுடிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, முன்விரோத கொலைகள் நிகழாமல் தடுக்க, அனைத்து காவல் துணை ஆணையர்களும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்