காஞ்சி, செங்கை மாவட்டங்களில் : நகராட்சி ஆணையர்கள் நியமனம் :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேருராட்சி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, குன்றத்தூர் பேரூராட்சிகள் 2-ம் நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

இதையடுத்து, இவற்றுக்கு முதல்முறையாக ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மாங்காடு நகராட்சிக்கு காஞ்சிபுரம் மண்டல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் செயல் அலுவலராக பணியாற்றிவந்த ஆர்.சுமா ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். குன்றத்தூர் நகராட்சிக்கு பொள்ளாச்சி நகராட்சி ஆணையரின் உதவியாளராக இருந்த என்.தாமோதரன் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உதகை நகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளர் எம்.இளம்பரிதி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்