காசி விஸ்வநார் கோயில் வளாகம் விரிவாக்கம் செய்து, புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அப்போது பாரதியின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி தமிழ்உச்சரிப்பை பிரதமர் உச்சரித்துபேசினார். இது குறித்த வீடியோவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு தெரிவித்திருப்பதாவது:
‘‘காசி நகர்ப் புலவர் பேசும்உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்றார்பாரதி. பாரதியின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி தமிழ்உச்சரிப்பை மிக அழகாகஉச்சரித்த பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். காசியிலிருந்து கேட்கும் இந்த உரைதான் புதுச்சேரியில் பாரதிக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும் என்ற என் ஆவலை வலுப்படுத்துகிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago