கள்ளக்குறிச்சியில் செயல்படும் அரசு மாதிரி பள்ளியில் நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் பி.என்.தர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வு தொடர்பாக ஆட்சியர் தெரிவித்தது:
சின்னசேலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை குறித்தும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்தும், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் மற்றும் இதர பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது.
குறிப்பாக, இப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளியின் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இம்மாதிரி பள்ளியில் நுழைவுத்தேர்வுக்கு நீட், ஜேஇஇக்கு பயிற்சி பெறும்25 பள்ளிகளைச் சேர்ந்த 80 பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி நடத்தப்பட்டது. அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.
மாணவர்களிடையே பேசிய ஆட்சியர், “இங்கு நடைபெறும் பயிற்சியைப் போல அடுத்த ஆண்டு நடைபெறும் பயிற்சியில் நீங்கள் வந்து பயிற்சி அளிக்கும் அளவிற்கு வாழ்வில் நீங்கள் உயர வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆழ்ந்து புரிந்து படித்தால் உங்களால் எந்த உயரத்தையும் அடைய முடியும். மாணவர்களாகிய நீங்கள் நன்றாக படித்து முன்னேற்றம் அடைய வேண்டும். கல்வியே உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆயுதம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள உரக்கிடங் கில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரிக்கும் இயந் திரத்தின் செயல்பாடுகளை ஆட்சி யர் தர் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago