நெய்வேலி 1 - வது சுரங்கத்தில் - என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் :

By செய்திப்பிரிவு

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் முதலாவது சுரங்கத்தில் தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள முதலாவது சுரங்கத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு ஒரு மாதத்தில் வழங்க வேண்டிய 26 நாள் வேலை நாட்களை 10 நாட்களாக குறைத்து வழங்கி வருகின்றனர்.

மேலும், தாங்கள் பல ஆண்டு களாக என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் தங்களை என்எல்சி ஒப்பந்தத் தொழி லாளர்களாக நியமிக்க வேண்டும்,

தங்களுக்கு மெடிக்கல் புக் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி முதலாவது சுரங்கம் முன்பு நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த என்எல்சி அதிகாரிகள் நெய்வேலி தெர்மல் காவல் ஆய்வாளர் லதா தலைமையிலான போலீஸார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்க ளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட் டனர்.

தங்கள் கோரிக்கைகள் குறித்து என்எல்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தெரி வித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்