காளையார்கோவிலில் - மின் கட்டண விவரத்தை தாமதமாக அனுப்பியதால் அபராதம் செலுத்திய நுகர்வோர் :

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியில் கடந்த 2 மாத மின் கட்டண விவரத்தை தாமதமாக அனுப்பி, தவணை நாட்களையும் குறைத்ததால் நுகர்வோர் பலர் அபராதம் செலுத் தினர்.

தமிழக மின்வாரியம் சார்பில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு, சில இடங்களில் குறித்த காலத்தில் முறையாக மின் கணக்கீடு எடுக் காததால், பெரும்பாலானோர் கூடு தல் மின் கட்டணம் செலுத் தினர்.

மேலும், கடந்த காலங்களில் மின் வாரியத்தினர் மின் கணக்கீடு எடுத்ததும், அதன் விவரத்தை அட்டையில் குறித்துவிட்டு செல்வர். ஆனால், தற்போது பெரும்பாலான வீடு, கடைகளுக்கு மின்வாரியத்தினர் அட் டைகளை கொடுப்பதில்லை. தற்போது மின் கணக்கீடு செய்த மறுநாளே கட்டண விவரத்தை மொபைல் போன், இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

மேலும் மின் ஊழியர்கள் மின் கணக்கீடு எடுத்ததில் இருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.

காளையார்கோவில் பகு தியில் கடந்த மாதம் மின் கட் டண விவரம் மொபைலுக்கு தாமதமாக அனுப்பப்பட்டது. இதனால் தவணை நாட்கள் குறைந்து, குறித்த தேதிகளில் மின் கட்டணத்தை செலுத்தாமல் பலர் அபராதம் செலுத்தினர்.

இதுகுறித்து காளையார் கோவிலைச் சேர்ந்த மின் நுகர் வோர் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக மின் கட்டண விவ ரத்தை தாமதமாகவே அனுப்பு கின்றனர்.

இதனால் தவணை நாட்களும் குறைவாவே உள்ளதால், உரிய காலத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் போகிறது. ஆனால், ஒருநாள் தாமதமாக கட்டணம் செலுத்தினாலும் அபராதமாக ரூ.100 வசூலிக்கின்றனர்’ என்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதி காரிகளிடம் கேட்டபோது, ‘இனி முறையாக கட்டண விவரம் அனுப் பப்படும்,’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்