புவிசார் குறியீடு பெற்ற பழநி பஞ்சாமிர்தத்துக்கு அஞ்சல் துறை சிறப்பு தபால் உறை வெளியீடு :

By செய்திப்பிரிவு

புவிசார் குறியீடு பெற்ற பழநி பஞ்சாமிர்தத்துக்கு அஞ்சல் துறை சார்பில் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.

புவிசார் குறியீடு பெற்ற திண்டுக்கல் பூட்டு, சிறுமலை வாழைப்பழம், கொடைக்கானல் மலைப்பூண்டு ஆகியவற்றுக்கு இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு தபால் உறை ஏற்கெனவே வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது புவிசார் குறியீடு பெற்ற பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்துக்கு சிறப்பு தபால் உறை வெளியிடும் நிகழ்ச்சி பழநியில் உள்ள கோயில் அலுவலகத்தில் நடைபெற்றது. அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் டி.சகாயராஜு பஞ்சாமிர்தம் சிறப்பு தபால் உறையை வெளியிட பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அலுவலக மேலாளர் சேகர் பெற்றுக் கொண்டார். உதவி கோட்ட கண்காணிப்பாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பழநி தலைமை அஞ்சலக தலைவர் திருமலைசாமி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்