கோசாலை அமைத்தும் கட்டுப்படுத்த முடியாத மாடுகள் : ஏழை பெண்களுக்கு தானமாக கொடுக்க கோயில் நிர்வாகம் முடிவு

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரியில் கோசாலை அமைத்தும் மாடுகளை கட்டுப்படுத்த முடி யாததால் ஏழை பெண்களுக்கு மாடுகளை தானமாகக் கொடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய் துள்ளது.

சிங்கம்புணரியில் பழமை வாய்ந்த சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் மாடுகளை நேர்த்திக்கடனாக கொடுக்கின்றனர். இதனால் பல ஆயிரம் மாடுகள் பராமரிப்பின்றி இப்பகுதிகளில் திரிகின்றன. சில நேரங்களில் கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மேய்கின்றன.

இப்பகுதி மக்கள் இம் மாடுகளை அய்யனாராக நினைத்து வணங்கு வதால் அவற்றை அடிக்கவோ, துன்புறுத்தவோ செய்வதில்லை. ஆனால் பயிர்களை மேய்வதால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்படுகிறது. இதையடுத்து மாடுகள் விளைநிலங்களுக்குள் இறங்காமல் இருக்க ரம்பம், கம்பி, கம்பால் வேலி ஏற்படுத்தி உள்ளனர். மேலும் மாடுகள் அடிக்கடி வாகனங்களில் விபத்துக் குள்ளாகி இறக்கின்றன. சில சமயங்களில் வாகன ஓட்டு நர்களும் இறக்கின்றனர்.

இந்நிலையில் சில ஆண்டு களுக்கு முன்பு கோயில் அருகே சமூக ஆர்வலர் சிலர் கோசாலை அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை பராமரித்து வருகின்றனர். இருந்தபோதிலும் மாடுகளை கட்டுப்படுத்த முடிய வில்லை. இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘மாடுகளை நேர்த்திக்கடன் விட வேண்டாம் என்று சொல்லி விட்டோம். இப்பிரச்சினையை தீர்க்க ஏழைப்பெண்களின் பொரு ளாதார மேம்பாட்டுக்கு கோயில் மாடுகளை தானமாக கொடுக்க உள்ளோம் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்